பிரதமர் மோடிக்கு சவால்விட்ட ராகுல் காந்தி

பிரதமர் மோடி வெளிநாட்டினரின் உதவியால் பதவிக்கு வந்ததாகவும், அவர்களின் ஆதரவாலேயே ஆட்சியில் நீடிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். இந்தியாவின் நிதி அமைப்பும் சமூக ஊடகங்களும் வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக குறிப்பிட்ட அவர், இது குறித்து விவாதிக்க துணிச்சல் இருந்தால் எந்த நேரத்திலும் எந்த மேடையிலும் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என்றும் பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார். ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ள இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕