தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் 'SIR' திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த 'SIR' திருத்தப் பணிகள் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, டெல்லியில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று (நவ.18) ஆலோசனை நடத்தியுள்ளார்.