தினமும் 7 முதல் 8 மணிநேரம் வரை போதுமான அளவு தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்வதற்கு, தூக்கத்தின் அளவை விட அதன் தரமே முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக மன அழுத்தம், தூங்குவதற்கு முன்பு மொபைல் போன் பயன்படுத்துவது மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் தூக்கத்தின் தரத்தை கெடுத்து உடலை சோர்வடைய செய்கின்றன. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்பதால், தொடர் சோர்வு இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.