பெண்கள் டெக்பால் அரையிறுதியில் குயின்சி டிசௌசா தோல்வி

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் டெக்பால் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் குயின்சி டிசௌசா தோல்வியடைந்தார். இந்தோனேசியாவின் சுமையாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டை 12-7 என கைப்பற்றிய குயின்சி, அடுத்த இரு செட்களில் 9-12, 7-12 என தோல்வியடைந்தார். இதனால் 1-2 என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்தார். இருப்பினும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குயின்சிக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் வெண்கலத்துக்காக விளையாட உள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕