தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக தாட்கோ மூலம் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளன. மேலும், அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், கழிப்பறை வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. கிராமப்புறங்களில் இளைஞர்கள், மாணவர்களின் பயன்பாட்டிற்காக கணினி, இணையம், நூலக வசதிகளுடன் கூடிய 'கிராம அறிவுசார் மையங்கள்' அமைக்கப்படவுள்ளன. இதற்கான டெண்டர் பணிகள் நவ., 2026-ல் முடிந்து, ஒப்பந்தங்கள் டிசம்பர் மாதம் வழங்கப்படும். 2027 ஜனவரி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.