வெற்றிலை செரிமானத்தை மேம்படுத்தும், பற்களை சுத்தம் செய்யும். வெற்றிலையில் நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் அதிகம். இதில் உள்ள ‘அர்கோலைன்’ என்கிற வேதிப்பொருள் வாய், தொண்டை மற்றும் உணவு குழாயில் புற்று நோய்களை ஏற்படுத்தும். வெற்றிலையை தொடர்ந்து சாப்பிட்டுவது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்யும். பற்களை கறைப்படுத்தும். ஈறுகளை பாதிக்கும். வாய்களை புண்களை ஏற்படுத்தும். எனவே அளவோடு பயன்படுத்துவது நல்லது.