ரஷ்ய அதிபர் புதின் வரும் டிச., 5ஆம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்தியா - ரஷ்யா பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ராஸ்காங்கிரஸ் அறக்கட்டளை உறுதி செய்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2021 டிச., மாதம், புதின் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.