தவெக தலைவர் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலைமைக் கழகத்தின் முன் அனுமதி இல்லாமல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் எந்த ஊடக விவாதங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேட்டிகள் அல்லது யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக நேர்காணல்களிலும் பங்கேற்கக் கூடாது. விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18