சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் வெற்றியத் தொடர்ந்து தற்போது ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த ‘புஷ்பா 2’ படத்தின் வடஇந்தியாவில் மட்டும் திரையரங்கு உரிமம் ரூ.200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.