அதிமுக MLA-க்கள் இன்று தவெகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை தவெக தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்து தவெக மெஜாரிட்டியை கூட்டவே இது நடந்தது” என்றார்.