முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சரிசெய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, வித விதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதலமைச்சர் கவனம் செலுத்திக் கொண்டிருப்பது அவரது அனுபவமற்ற ஆளுமையைத் தான் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் எப்போதுதான் உணர்வார்?” என குறிப்பிட்டுள்ளார்.