CSK அணிக்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது PBKS அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த PBKS அணி அதிரடியாக விளையாடிய போதும், சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இந்நிலையில், பிரியன்ஷ் ஆர்யாவின் அதிரடி சதத்தால் அந்த அணி மீண்டெழுந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரியன்ஷ் 103, ஷஷாங்க் சிங் 52* மற்றும் மார்கோ ஜான்ஸென் 34* ரன்கள் குவித்தனர்.