புதுக்கோட்டை: சாலை விபத்தில் வாலிபர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் விஜயன்(28) எலக்ட்ரீசியன். இவர் பணி நிமித்தமாக திருச்சி - புதுக்கோட்டை ரிங் ரோட்டில் மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே பைக்கில் சென்ற போது முன்னால் சென்ற வாகனம் திடீரென்று பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த விஜயன் முன்னால் சென்ற வாகனத்தில் மோதி படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி