குடுமியான்மலை பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் உப்புபாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த, போதும் பொண்ணு (48) என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.