விராலிமலை: மொபட்டில் சென்ற தொழிலாளி விபத்தில் பலி

விராலிமலை காக்கா குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பன்னீர்செல்வம்(45) வியாழக்கிழமை மொபட்டில் வீடு திரும்பும்போது, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விராலூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விராலிமலை போலீசார், பன்னீர்செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி