விராலிமலை: மகன் மாயம்; தந்தை போலீசில் புகார்

விராலிமலை: விராலுார் பிள்ளம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்முத்து(46).இவரது மகன் சக்திவேல்(23).டிப்ளமோ முடித்து விட்டு கொடும்பாக்கம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி செந்தில்முத்து அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி