விராலிமலை: சொட்டுமருந்தால் குழந்தை உயிரிழப்பு

விராலிமலை ஒன்றியம் செங்களாக்குடியை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு இரண்டரை வயதில் நதீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பார்வை திறன் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்குவதற்காக நேற்று (மார்ச் 21) காலை ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார், 

காலை 10:30 மணியளவில் குழந்தைக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து செவிலியர்கள் செலுத்தினர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் 12:00 மணி அளவில் குழந்தை அழத் தொடங்கியது சிறிது நேரத்தில் சோர்வடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி குழந்தையை மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றார். 

குழந்தையை பார்த்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கியதால் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி