புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அருகே சாலையோரம் காயமடைந்த புள்ளிமானை போலீசார் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். முக்கண்ணாமலைப்பட்டி சத்திரத்தில் சாலையோரத்தில் புள்ளிமான் ஒன்று காயமடைந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியினர் இதுகுறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் காயமடைந்து கிடந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.