புதுக்கோட்டை: பேருந்து மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டியில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ராயபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பழனியப்பன் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி