விராலிமலையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வேலாம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பணியாளர் இருவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.