விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் உள்ள தனியார் மெக்கானிக் கடையில் ஹெல்பராக வேலை பார்த்து வந்த 17 வயது நவமணி, இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்ய எடுத்துச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து கடை உரிமையாளர் சேகர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நவமணியின் மரணம் மர்மமாக அமைந்துள்ளது.