புதுக்கோட்டை: கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

விராலிமலை டோல்கேட்டில் காரில் மதுரை சென்ற சென்னையை சேர்ந்த நல்லதம்பி(65) என்பவர், ரூ. 200 செலுத்தியபோது கள்ள நோட்டு என தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், நல்லதம்பியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையில் கள்ள நோட்டு அச்சடிப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷேக் பகுருதீன் என்பவரையும் விராலிமலை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி