புதுக்கோட்டை மாநகரப் பகுதி முழுவதும், 'முடிவெடுங்கள் தலைவா உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்' என முன்னாள் அமைச்சர் மற்றும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருப்பது தற்போது பரவலாகப் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. இது விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் தனிப்பட்ட செயல்பாடாகக் கருதப்படுகிறது.