இலுப்பூர் விளாப்பட்டியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், தனது மகள் கோகிலா (20) டைப்பிஸ்ட் பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றதாகவும், வீடு திரும்பவில்லை என்றும் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.