புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிழக்குத்தெரு விஷ வண்டு கூடு கட்டி அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சுறுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புதுறையினர் தீப்பந்தத்தை ஏற்றி விஷவண்டுகளை முற்றிலும் அகற்றினர்.