புதுகை: முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை அருகே தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் முக்கிய திருவிழாவான தேரோட்டத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி 4 வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தன.

தொடர்புடைய செய்தி