இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர சசிகலா முயற்சி மேற்கொண்டார். ஆனால், முருகேசன் பணிபுரிந்த நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்காததால் இதுபற்றி மதிமுக ஒன்றிய செயலாளர் வைரமூர்த்தியிடம் தகவல் தெரிவித்தார். வைரமூர்த்தி இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி மூலமாக திருச்சி தொகுதி எம்பி துரை. வைகோ கவ னத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து எம்பி துரை வைகோ உடனடியாக கத்தாரில் இருக்கும் மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேசை தொடர்பு கொண்டு முருகேசன் உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு
வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி விமானம் மூலம் உடல் நேற்று முன்தினம் சென்னை வந்தது. குவைத் நாட்டை சேர்ந்த இந்திய வம்சா வளியினரான சமூக ஆர்வலர் மதி உதவி யால் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் முருகேசன் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல, குவைத் நாட்டில் இறந்த ஒருவரின் உடலை சொந்த ஊரான திருச்சிக்கும், இலங்கையில் இறந்த ஒருவரின் உடலை தஞ்சைக்கும் கொண்டு வர எம்பி துரை வைகோ முயற்சி மேற் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.