மாத்தூர்: பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த ஆவூரில் இருந்து குளத்தூருக்கு பைக்கில் சென்ற நாகராஜ் (49) மற்றும் கோகிலா (43) மீது, மாத்தூர் அடுத்த நத்தக்காடு கிளை சாலையில் முகமது பலில் (22) ஓட்டி வந்த கார் மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி