அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக அன்னவாசல் காவல் துறையினருக்கு புகார்கள் வந்ததின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிர்வேல் என்பவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்து மேலும் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.