குளத்தூர் அருகே பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் ஆஞ்சனேயர் கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, சஞ்சீவி ராயர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த திருவிழாவில் அன்னம், கோமா மாதா, கிளி, மான், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினசரி சாமி வீதி உலா நடைபெற்றது.