இலுப்பூர் அருகே கரந்தப்பட்டியில் நேற்று நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில், ஆர்டிஒ கோகுல்சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்ற இந்த போட்டியில், மாடு முட்டியதில் 13 வீரர்கள் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.