இலுப்பூர்: லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நேற்று 63 வயது அழகன் என்பவர் 3 இலக்க லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலுப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் ரூ. 1650 பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி