இலுப்பூர்: சூதாடிய 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆச்சநாயக்கன்பட்டி பகுதியில் பொது இடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிய இலுப்பூர் பகுதியை சேர்ந்த செல்வம் (28), குமார் (32), ரவி (27), சிவா (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி