இலுப்பூர்: கஞ்சா விற்ற 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலுப்பூர் கரடிக்காடு பகுதியில் கஞ்சா விற்ற அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் (22), ராப்பூசல் பகுதியில் கஞ்சா விற்ற எட்டுக்கால்பட்டியை சேர்ந்த பூபதி (23) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி