புதுகை: விஷம் குடித்த இன்ஜி. மாணவர் உயிரிழப்பு

விராலிமலை: தர்மபுரி மாவட்டம் அண்ணாமலை ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் தினேஷ்குமார் (20). திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பொறியியல் மூன்றாமாண்டு படித்து வந்தார். 

மாணவர் தினேஷ்குமார் வகுப்புக்கு முறையாக வராதது குறித்து பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து பெற்றோர் வந்து மகனுக்கு அறிவுரை கூறிச்சென்றனர். இதனால் மனமுடைந்த தினேஷ்குமார் கடந்த மாதம் 28ம் தேதி பல்கலைக்கழக எதிரில் உள்ள தனியார் தொழிற்சாலை முன்பு அமர்ந்து விஷம் குடித்தார். இதை பார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தினேஷ்குமார் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி