புதுக்கோட்டை: சாலை விபத்தில் முதியவர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் கல்லடக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (70). இவர் நேற்று டீ கடைக்கு டீ குடிக்க நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த காலாடிப்பட்டியை சேர்ந்த ரவிசந்திரன் (வயது-31) ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் சங்கர் படுகாயம் அடைந்தார். இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி