விராலிமலை: குழந்தைக்காக உறவினர்கள் மோதல்; காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

விராலிமலை தாலுகா ஆம்பூர்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (34) இவரது மனைவி ரீட்டாமேரி (21). காதலித்து 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. ரீட்டாமேரி வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்று கூறி மாமியார் திட்டியதால் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் ரீட்டாமேரியின் தந்தை ஜோசப், சகோதரர் ஆரோக்கியராஜ் இருவரும் கடந்த 25ம் தேதி இரவு ஆம்பூர்பட்டிக்கு வந்து ரீட்டாமேரிக்கு பிறந்த குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர். அதற்கு ஆரோக்கியசாமி மறுப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

மருத்துவமனையில் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆரோக்கியசாமியின் தாத்தா சாமிக்கண்ணு (70) திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை உயிரிழந்தார். மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி