புதுக்கோட்டை: பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக குடித்த முதியவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குமாரமங்களத்தை சேர்ந்தவர் கருணாநிதி (65). கடந்த ஓராண்டாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று டானிக் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக குடித்தார். 

இதையறிந்த மகன் கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியடைந்து உடனடியாக தந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி