விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் இடையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் சிவா (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 9 ஆம் தேதி விராலிமலை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி இதுகுறித்து இலுப்பூர் மகளீர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.