புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து கீரனூருக்கு சிவா (29) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போலம்பட்டி சாலையில் அவருக்கு பின்னால் காரை ஓட்டி வந்த பாண்டிசெல்வம் (25) மோதியதில் சிவாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரில் இலுப்பூர் போலீசார் பாண்டிசெல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.