விராலிமலை: தங்கையை தாக்கிய அண்ணன் கைது

மாத்துார் அருகே உள்ள வெள்ளைப்பிள்ளையார்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (42). விவசாயி. இவரது தங்கை மகாலட்சுமி (38). இவரும் குடும்பத்தினருடன் அதே ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் தந்தை சொப்பனப் பெயரில் உள்ள சொத்துக்களை இருவரும் பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் நேற்றுமுன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கை மகாலட்சுமியை பாலசுப்பிரமணியன் தாக்கினார். இதில் காயமடைந்த மகாலட்சுமி மாத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி