அன்னவாசல் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கூடலூரை சேர்ந்தவர் குமாரவேலு (49). இவர் கொல்லம்பட்டியிலிருந்து கூடலூருக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, கொல்லம்பட்டி கிளைச்சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த மாரிமுத்து (22) மோதியதில் குமாரவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி