விராலிமலை அடுத்த ஆவூரைச் சேர்ந்த ஆனந்தன் (42) என்பவர் விராலிமலை பாத்திமா நகரில் இருந்து ஆவூருக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பிரேமானந்தா ஆசிரமம் அருகே உள்ள சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த ஜான் பீட்டர் (45) மோதியதில் ஆனந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.