புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்த முதலிக்குளம் பகுதியில் நேற்று குமார் (35) மற்றும் அஜித்குமார் (26) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அன்னவாசல் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.