புதுக்கோட்டை: மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த நபர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே செங்குலம் பகுதியைச் சேர்ந்த சேகர் (35) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அன்னவாசல் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி