மாத்தூர் அருகே மது அருந்திவிட்டு இடையூறு செய்த நபர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த ஆவூர் பெட்ரோல் பங்க் அருகே, நேற்று ஆறுமுகம் (56) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஆறுமுகம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி