விராலிமலையில் சிறுமிக்கு திருமணம்; 4 பேர் மீது வழக்கு

விராலிமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாகவும், தற்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், விராலிமலை சமூகநல விரிவாக்க அலுவலர் வெள்ளிமலர் விசாரணை நடத்தினார். இதில் சிறுமிக்கு திருமணம் நடந்ததும், 2 மாத கர்ப்பிணியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வெள்ளிமலர் இலுப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், திருப்பதி (வயது 21), மூக்கன் (60), ராணி (50), முத்து (62) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி