புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியில் பொது இடத்தில் வட்டமாக அமர்ந்து பலத்த சத்தத்துடன் சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிவேல், பழனிச்சாமி, முத்துக்குமார், முருகதாஸ், விஜயக்குமார், சத்யானந்தம் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.