புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காயாம்புஞ்சையைச் சேர்ந்த மாரிச்செல்வி(27) இவர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் பாலசுந்தராம்பாள் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னமராவதி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.