புதுக்கோட்டை: டிப்பர் லாரி மோதி ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பரமக்குடி அருங்குளம் கிராமத்தை சேர்ந்த சசி மோகன். புதுகையில் இருந்து நேற்று(அக்.5) மதியம் தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது திருமயம் பிரிவு சாலையில் டிப்பர் லாரி ஒன்று இவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மனைவி பவானி கொடுத்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி